சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ந்தேதி மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியாளர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு, ஊரடங்கு தளர்த்துதல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மே மே 2-ம் தேதி தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.