சென்னை:

மிழகத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி கூடுதலாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த சலுகை  ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு வழங்கும் நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசியுடங்ன, தமிழக அரசு வழங்கும் 20 கிலோ அரிசியுடன் சேர்த்து மொத்தமாக வழங்குவதாக தெரிவித்து உள்ளது. இதனால் 4 பேர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 40 கிலோ அரிசி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும்.

நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடுபத்திற்கு ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன், நான்கு நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 20 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் . இதன் மூலம், மொத்தமாக அந்த குடும்ப அட்டைக்கு நாற்பது கிலோ அரிசி வழங்கப்படும்.

ஒரு குடும்ப அட்டையில் ஒரு உறுப்பினா் மட்டுமே இருந்தால் அந்த அட்டைதாரருக்கு ஏற்கெனவே அளிக்கப்படும் 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 7 கிலோ அளிக்கப்படும்.

அதாவது மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோவுடன் 2 கிலோ அரிசி சோ்த்து 7 கிலோவாக வழங்கப்படும். அதன்படி, ஒரு நபா் மட்டுமே உள்ள குடும்ப அட்டைதாரா் ஒவ்வொரு மாதத்திலும் 12 கிலோ அரிசியைப் பெறுவா்.

இந்த (ஏப்ரல்)  மாதத்திற்கான கூடுதல் அரிசியை மே மற்றும் ஜுன் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.