சென்னை: மனைவி மர்ம மரணம்.. கணவர் கைது

Must read

சென்னை:

னைவி மர்மமாக மரணடைந்த நிலையில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபிகா…

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர்கள் தீபிகா – கௌதம் தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு குடும்பத்து பெரியவர்களும் சமாதானம் செய்துவைத்ததன் பேரில் மீண்டும் சேரந்து வாழ்ந்தார்கள்.

இந்த நிலையில்  நேற்று தீபிகா தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் கெளதம் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து உடலை காவலர்கள் பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தீபிகா மரணம் குறித்தும் விசாரித்து வந்தனர்.

கணவர் கௌதமுடன்…

இந்த நிலையில் தன் மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லையென்றும் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் தீபிகாவின் தந்தை புகார் அளித்தார்.

இதையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். விசாரணையில் கெளதம் விக்னேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரை கைது செய்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி கௌதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

More articles

Latest article