சென்னை

பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் என பலருடைய செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.   நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

பாஜக அரசு விவாதத்துக்கு ஒப்புக் கொள்ளாததால் எதிர்க்கட்சிகள் அமளி நடத்தி தற்போதைய நாடாளுமன்ற தொடர் நடக்காமல் முடங்கி உள்ளது.  பிரதமர் மோடி இது குறித்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்காமல் உள்ளார்.   இது எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில்,

“இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் இருந்து விலகிவிட்டது.

பெகாசஸ் விவகாரத்தில் 6 முதல் 7 துறைகள் மீது சந்தேகம் உள்ள நிலையில், ஒரு துறை குற்றமற்றது என்றால் மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன?

ஒட்டு மொத்த மத்திய அமைச்சகங்களின் சார்பாகப் பேசக்கூடிய அதிகாரம் பிரதமர் மோடிக்கு உள்ளது.  ஆனால் அவர் இது குறித்து பேசாமல் மவுனமாக உள்ளார்.  இது ஏன்? ”

எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.