11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலி

Must read

டெல்லி: 11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.29 லட்சத்தை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 38,353 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,36,511 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மேலும் 497 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,179 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 40,013பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,12,20,981 ஆக உயர்ந்துள்ளது. ணமடைந்தோர் விகிதம் 97.45% ஆக உயர்ந்துள்ளது

நாடு முழுவதும் தற்போதைய நிலையில்,  3,86,351 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 51,90,80,524 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நேற்று மட்டும் 41,38,646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

More articles

Latest article