பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என,  மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சிக்காக கடந்த 2013ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதிக்கு டெல்லியில் பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிதி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சிக்காக,  நாடு முழுவதும் உள்ள சமூக சேவை நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.
download (1)
ஆனால் 2014ம் ஆண்டு புதிதாக பதவியேற்ற பாஜக தலைமையிலான அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை பயன்படுத்தாதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்க கோரி மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
மேலும்,  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பாக தேசிய திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளது.