மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

Must read

கிருஷ்ணகிரி:
ன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்றும், சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஓருவாக்கி செயற்க்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

டிடிவி அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால் அதற்க்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும் என்றார்.

More articles

Latest article