நான் ஏன் ஹீரோவாக ஆனேன் – ஹிப் ஹாப் தமிழா விளக்கம்

Must read

meesaiya-murukku
சில தினங்களுக்கு முன்பு ஹிப் ஹாப் தமிழாவின் நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இவர் திடீர் ஹீரோ அவதாரம் எதற்கு என்று? அவரை தொடர்பு கொண்டு இதை பற்றி கேட்டபோது.
நான் பொதுவாக என்னுடைய ஆல்பங்களில் நானே இசையமைத்து நடனமும் ஆடுவேன் அதுதான் என்னை ஹீரோவாக மாற்றியது. ஹீரோவாக ஆக வேண்டும் என்று எதுவும் பிளான் செய்யவில்லை. ஆனால் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்தேன் ஆனால் சுந்தர் அண்ணா இதை எல்லாம் நீ பண்ணு தயாரிப்பு மட்டும் நா பார்த்துக்குறேன் என்று கூறிவிட்டார், அவர் தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் இப்போது அவரே என்னை ஹீரோவாகவும் அறிமுகம் செய்கிறார்.
இந்த திரைப்படம் கல்லூரியில் இசை பிரியனின் வாழ்கையில் ஏற்படும் இன்பமும் துன்பமும் பற்றியது, அவன் முன்னேற நினைக்கும் இளைஞனுக்கு வரும் தடைகளை பற்றிய கதைதான் இது. இந்த திரைப்படம் வெளியானபின் அனைத்து இளைஞர்களும் மீசையை முறுக்கி கொண்டு திரிவார்கள் என்றார்.

More articles

Latest article