பிற மதத்தினருக்கு உள்ள நாடுகள் போல இந்துக்களுக்கு ஒரு நாடு இருக்க கூடாதா ?: பாஜக எம்.பி ரவி கிஷன் பேச்சு

Must read

கிருஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கான நாடுகளை போல இந்துக்களுக்கு என தனி நாடு இருக்க கூடாதா ? என பாஜக மக்களவை உறுப்பினரும், நடிகருமான ரவி கிஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியா வரும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன் கூறியதாவது, “இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான நாடுகள் இருக்கின்றன. நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க நமது நாட்டை இனி பாரத் என்று அழைப்போம்.

உலகில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனி நாடுகள் இருக்கும்போது, இந்துக்களுக்கு என்று ஒரு நாடு இருக்க கூடாதா ? அப்படி இந்துக்களுக்கான நாடாக இந்தியா இருக்கட்டும். இந்தியா என்பது இந்து ராஷ்டிரா” என்று தெரிவித்தார்.

More articles

Latest article