ஸ்கூப்வூப் செய்திகளுக்காக சுவாதி சதுர்வேதி
அன்றைய தினம் அமர்சிங்கின் பேட்டிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பேட்டியினிடையில் அமர்சிங் திடீரென்று கோபத்துடன் எழுந்து என்னை நோக்கி கத்தினார். “இனி அமிதாப் பச்சனும், அனில் அம்பானியும் சுபர்தோ ராயும் உங்களுடன் எப்போழுதும் பேசமாட்டார்கள்!”

amar1

அந்த பிரபலங்கள் தினமும் என்னுடம் பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்ல, நாம் அமர்சிங்கின் நடவடிக்கைகளைப் பார்த்து பிரம்மை பிடித்தவளைப்போல அமர்ந்திருந்தேன், அதன் பிறகு நானும் செட்டில் இருந்தவர்களும் அவரை சமாதானப்படுத்தி பேட்டியை தொடர முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அவர் ஆக்ரோஷமாக வெளியேறிவிட்டார்.
அடுத்தநாள் பல அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் என்னை போனில் அழைத்து ஒரே விஷயத்தை சொல்லியவண்ணம் இருந்தனர். அவர்களை அதிகாலை 3 மணிவரை தூங்கவிடாமல் அமர்சிங் அவர்களுக்கு போன் செய்து அவர்களிடம் என்னைப் பற்றி கொட்டி தீர்த்திருக்கிறார். எனது மூன்று நண்பர்களாஅன அமிதாபும் அம்பானியும் சுபர்தோவும் அவருடன் இனி பேசமாட்டார்கள் என்பதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்திருக்கிறார்.
அமர்சிங்கும் அவரது தலைவர் முலாயம்சிங்கும் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த காலங்களில்தான் நான் அமர்சிங்கிடம் அந்த கேள்வியை வைத்தேன் “ சோஷலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் தாங்கள் ஏன் லட்சக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள குர்தா அணிகிறீர்கள்? ஏன் விலையுயர்ந்த பாதெக் பிலிப்பி வாட்ச் அணிந்திருக்கிறீர்கள்? ஏன் நான்கு கேரட் மதிப்புள்ள தங்க மோதிரத்தை விரலில் அணிந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். (இந்த வைர மோதிரம் என் எதிரிகளை அடக்க என்று ஷூட்டிங் நடப்பதற்கு முன்பு என்னிடம் சொல்லியிருந்தார்)
இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் என்னை ஓரக்கண்ணில் ஒரு மாதிரியாக பார்த்தவராய், நீ என்னை பேட்டி எடுப்பதால்தான் நான் இப்படி அணிந்து வந்திருக்கிறேன் என்றார். அதற்கு நான் நீங்கள் இவைகளை அணிந்திருப்பதால் நான் உங்களை பேட்டி எடுக்கவில்லை, மாறாக சமாஜ்வாடி கட்சியின் பொதுசெயலாளர் என்பதால்தான் நான் உங்களை பேட்டி எடுக்கிறேன் என்று சொன்னதும் அவர் முகம் கறுத்துப்போனது.
இதே அமர்சிங்தான் சமாஜ்வாடி கட்சியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னை நேருக்குநேராக வியாபாரி என்றும் , பாஜகவின் உட்கை என்றும் குற்றம்சாட்டியபோது தனது இயல்புக்கு மாறாக அமைதி காத்தவர்.
இதே அமர்சிங் தனது முந்தைய இன்னிங்சில் தன்னிடம் லேட்டஸ்ட் உளவுக்கருவிகள் இருப்பதாகவும் எல்லோரைப்பற்றிய டேப்பும் தன்னிடம் இருப்பதாகவும் பெருமையாக தம்பட்டம் அடித்தவர். இவர் எந்த விஷயத்திலும் எப்போதும் மக்களின் கண்கள் முன்பாக தன்னை காட்டிக்கொள்வதில் குறியாக இருப்பவர்.
அமர்சிங் மறைந்த மாதவராவ் சிந்தியாவின் உதவியால் அரசியலுக்கு வந்தார், அவரது உதவியால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போர்டுக்குள் நுழைந்தார். மாதவராவ் சிந்தியாவின் அனைத்து பயண வேலைகளையும் கவனித்துக் கொணிருந்தவர் பாலிவுட்டில் கிடைத்த வியாபார தொடர்புகள் வழியாக முலாயம்சிங் யாதவிடம் வந்து சேர்ந்துவிட்டார். வெகு சீக்கிரத்திலேயே முலாயமின் அன்புக்குரியவராகவும் மாறிவிட்டார்.

amar2

பாலிவுட் பிரபலங்களை சாய்ஃபாய் பண்டிகையில் நடனமாட வைத்தார், அனில் அம்பானி முதலிய பெரும் தொழிலதிபர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார், உத்திரப்பிரதேசத்தின் முகத்தையே மாற்றப்போகிறேன் என்று சூளுரைத்தார், அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு ராஜ்யசபாவில் உறுப்பினர் பதவி கிடைக்க சமாஜ்வாடி கட்சி பரிந்துரைக்க காரணமாயிருந்தார் இப்படி இவரது அரசியல் காய் நகர்த்தல்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இப்படியாக அமர்சிங் ஒரு முழு அரசியல்தரகராக உருவெடுத்துவிட்டார். இவ்வளவு ஏன்? அனில் அம்பானியைக்கூட சமாஜ்வாடிகட்சியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக்கி விட்டார். ஆனால் தான் ஏன் ஒரு கட்சியின் சார்பாளராக இருக்க வேண்டும் என்று நினைத்த அனில் அம்பானி உடனே அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அமர்சிங அம்பானியை பத்தோடு பதினொன்றாக்கி விட்டார் என்று அம்பானியின் எதிரிகள்கூட அவரை கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அமர்சிங்கின் நடவடிக்கைகளைப் பார்தத முரளி தியோரா, “அமர்சிங் எப்படி தந்திரமாக அம்பானிகளின் குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி, சஞ்சய்தத்துக்கும் அவரது சகோதரிக்கும் மனக்கசப்பை உண்டாக்கி இப்போது முலாயம்சிங் யாதவ் குடும்பத்திலும் பிளவை உருவாக்கிவிட்டார்!” என்று விமர்ச்சித்திருக்கிறார்.
அமர்சிங்கை பற்றி நன்கு அறிந்துகொண்ட அகிலேஷ் யாதவும், ராம்கோபால் யாதவும் அவரை கட்சியைவிட்டு நீக்கச் சொல்லி கட்சித்தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கடி கொடுக்க, அமர்சிங்கின் எதிரியான அசம்கான் என்பவர் “அமரின் கதை முடிந்தது என்று சொல்லி அதை ஒரு விழாவாகவே கொண்டாடினார்.
அமர்சிங் சமாஜ்வாடியிலிருந்து தூக்கி எறியப்பட்டதும் அமிதாப் பச்சன் அவரிடமிருந்த நட்பை துண்டித்துக் கொண்டார். இறுதியில் அமர்சிங் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார். சூழ்நிலைகள் அனைத்தும் அனைத்தும் அவருக்கு பாதகமாக மாற உடல்நலம் குன்றி அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி மட்டுமே அப்போது அவருடன் இருந்தது. இது பற்றி அறிந்த தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், இந்தியா டிவியின் தலைவராகிய ராஜத் ஷர்மாவும் ஒரு தனி விமானத்தில் சிங்கப்பூருக்கு சென்று அமர்சிங்கை பார்த்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். அமர்சிங்குக்கு பாஜகவுடன் ஒரு உள்ளான பிணைப்பு உண்டு, அதைத்தான் அகிலேஷ் யாதவ் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்.
அமர்சிங் தன்னை தாகூர் இனத்தில் தலைவராக அவ்வப்போது காட்டிக்கொள்வார். கவருக்கு தேர்தலில் டெப்பாசிட் போனபோதுகூட அவருக்கு கடைசிவரை உறுதுணையாக இருந்தது அவருடைய தோழி நடிகை ஜெயப்ரதா மட்டுமே. அமர்சிங் ஜெயப்பிரதாவின் தீவிர விசிறியாவார். அவர் ஒவ்வொரு ஜெயப்பிரதாவின் படங்களையும் 50 தடவை பார்த்துவிடுவாராம்,
ஜெயபிரதா ஒருமுறை தான் மிகவும் தனியாக உணர்வதாக வேதனையுடன் சொல்ல அடுத்த விமானத்திலேயே அமர்சிங் மும்பைக்கு வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவை அரசியலில் இழுத்தவரும் இவர்தான்.

amar3

இப்போது அமர்சிங் மறுபடியும் முலாயமின் உறவினரான ஷிவ்பால் வழியாக சமாஜ்வாடி கட்சியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். அகிலேஷுக்கோ அமர்சிங்கின் திரும்பி வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போது அமர்சிங் முலாயமின் குடும்பத்தில் பிரிவை உண்டாக்கிவிட்டார். முலாயமுக்கு அமர்சிங் மீதுள்ள அன்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அமர் முலாயமின் குடும்ப சண்டையை இன்னும் எந்த அளவுக்கு மோசமாக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Thanks to ScoopWhoop.com