தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ஜிபே மூலம் ரூ.4,000 லஞ்சம்  வாங்கி, அமைச்சரை விஜபி தரிசனத்தில் அழைத்துச் சென்றது, அர்ச்சகர்களின் அராஜகத்தை வெளிப்படுத்தி உள்ளது.

சுவாமிக்கு சேவை செய்பவர்கள் என்ற பெயரில் இதுபோன்ற கொடுஞ்செயல்களிலும், லஞ்ச லாவணங்களில் ஊறி திளைத்து வரும் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதுயார், பூனைக்கு மணி கட்டுவது யார் என பொதுமக்களும், பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திருச்செந்தூர் திகழ்கிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விரைவு தரிசனம் என்ற பெயரில் அர்ச்சகர்களும், கோவில் ஊழியர்களும் வசூல் வேட்டையில் ஈடுபடுவது தொடர் கதையாகிறது.

இதனால் அர்ச்சகர்கள் என்ற பெயரிலான பல ரவுடிகள், பணத்தை  பெற்றுக்கொண்டு அராஜகமாக நடந்துகொள்வதும், இதனால் அவ்வப்போது பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவதும்தொடர்கதையாகி வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக  அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர் ஒருவர் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஜிபே மூலம் அனுப்பிய நிலையில் அமைச்சர் யாரென்று தெரியாமல் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில் அர்ச்சகர் எந்தளவுக்கு துணிந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர்  ரமேஷ். இவருக்கு 32 வயது மட்டுமே ஆகிறது. இவர் பொறுப்பேற்றதில் இருந்து  கோவில்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பலகட்ட ஆலோசனை கூட்டங்கள், கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக  திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலுக்கு ஆய்விற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த  பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  தொடர்ந்து, கோவல் அன்னதான கூடத்திற்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்க எண்ணி கோவில் முன்பாக  சாதாரண மனிதர்களைப் போன  சென்றார். அப்போது கோயிலில் இருந்த அர்ச்சகர் ஒருவர் 4,000 ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அமைச்சர்,   ஜிபே மூலம் பணத்தை செலுத்திவிட்டு அமைச்சர் ரமேஷ் தரிசனத்திற்கு சென்றுள்ளார்.

வந்தவர் அமைச்சர் என்பது தெரியாமல் அர்ச்சகர் வசூல் வேட்டை நடத்தியதுடன், அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அமைச்சர் முகக்கவசம் அணிந்து வந்ததால் அங்கிருந்த பாதுகாவலர்கள் முதல் அதிகாரிகள், ஊழியர்கள் வரை யாரென்று தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்ச்ர முககவசத்தை அகற்றிவிட்டு,  ”நான் தான் அறநிலையத்துறை அமைச்சர்” என்று  கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் செய்வதறியாமல் திகைத்து நின்றார். மற்ற ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு,அவருக்கு சேவை செய்ய முன்வந்தனர்.  இதன்பிறகு, அதிகாரியை அழைத்த அமைச்சர் உடனே  சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டதுடன்,  , கோயில் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருச்செந்தூர் கோயிலை பொறுத்தவரை பக்தர்களிடம் பல ஆயிரம் ரூபாயை தினசரி லஞ்சமாக பெற்று கொண்டு கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்த விவகாரத்தில் இணை ஆணையர் வரை தொடர்பிருப்பதாக புகார் கூறுகின்றனர். எனவே தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை வேலையில் இருந்து நீக்கி, பக்தர்கள் எளிமையாக கோவிலுக்கு சென்று வர ஆவண செய்ய வேண்டும்என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மற்ற துறைகளை காட்டிலும் நம்முடைய துறை சிறப்பாக சேவையாற்ற வேண்டும். அறநிலையத்துறை கோயில்களுக்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் தான் நமது இலக்கு என்று தெரிவித்திருந்தார். ஆனால் இது வெறும் பேச்சோடு நிற்காமல் ஒவ்வொரு கோயிலிலும் கள ஆய்வு மேற்கொண்டு நிலைமையை அறிந்து, அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கேற்ப அமைச்சர் ரமேஷ் தற்போது கள ஆய்வில் அதிரடி காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

[youtube-feed feed=1]