டெல்லி: தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 11ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இந்த பயணத்தின்போது, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக, இரண்டு நாள் பயணமாக டில்லி சென்ற விஜய், மே 28ந்தேதிஅன்று பிரதமரை சந்தித்தார். தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, அப்போது தமிழக அரசின் கோரிக்கள் கொண்ட மனுவை வழங்கியதுடன், தமிழக வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
அன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்ர் டில்லியில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பின்னர் மேகதாது அணை விஷயமாக மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்
இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தவல்கள் வெளியாகின. ஆனால், அவர்களுடனான சந்திப்பு உறுதி செய்யப் படாத நிலையில் தமிழ்நாடு திரும்பினார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விஜய் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் அளித்த பேட்டியில், ”நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல், ராகுலுக்கு நேரமில்லை; இதனால், முதல்வர் விஜயுடனான சந்திப்பு நடக்கவில்லை. அடுத்த முறை முதல்வர் டில்லி செல்லும்போது, நிச்சயம் ராகுலை சந்திப்பார்,” என்றார்.
டில்லியில், வரும் ஜூன் 11ல், ‘நிதி ஆயோக்’ கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், பங்கேற்க விரும்புகிறார். எனவே, அவர் மீண்டும் டில்லி செல்ல உள்ளார். அப்போது, காங்., தலைவர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]