டெல்லி முதல்வர் பதவிக்கு 8 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதை அடுத்து இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகவும் இதுதொடர்பாக பிப்ரவரி 18ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 5ம் தேதி முடிவடைந்த நிலையில் 8ம் தேதி அதற்கான முடிவுகள் வெளியானது.

48 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேவேளையில், முதல்வர் தேர்வு குறித்து பிப்ரவரி 18ம் தேதி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள இருந்த ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிப். 18க்குப் பதில் பிப். 19ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதாகவும் பிப். 20 ம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து பிரவேஷ் வர்மா மாபெரும் வெற்றி பெற்றார். ஜாட் சமூகத்தில் இருந்து வந்த அவர் முதல்வர் பதவிக்கான வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார்.
இந்தப் போட்டியில் பிரவேஷ் வர்மா, விஜேந்திர குப்தா, சதீஷ் உபாத்யாய் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர, பவன் சர்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் ஆகியோரின் பெயர்களும் விவாதத்தில் உள்ளன.
டெல்லி முதல்வர் யார் ? அமெரிக்க அதிபரை சந்தித்து திரும்பியதும் பிரதமர் மோடி முடிவெடுப்பார்…