மகாகும்பமேளா நிகழ்வில் இன்று வரை சுமார் 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பலரும் நீராடி வரும் நிலையில் இன்று நடிகை கங்கனா ரணாவத் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநில ஆளுநர்கள் நீராட உள்ளனர்.
திரிவேணி சங்கமத்தில் நீராட இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதாகவும் இன்று காலை முதல் இதுவரை சுமார் 58 லட்சம் பேர் நீராடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து ப்ரயாக்ராஜ் நகரில் காவலில் உள்ள காவலர்களின் பணி பிப்ரவரி 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரிவேணி சங்கம படித்துறை பிப்ரவரி 26ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகருக்குள் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதை அடுத்து நகருக்கு வெளியே சுமார் 10 – 12 கி.மீ. தொலைவில் வாகனங்களை நிறுத்தி பக்தர்கள் நடந்தே செல்கின்றனர்.
பிரயாக்ராஜ் வழியாக செல்லும் 15 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் பாஸ் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.