நெட்டிசன்

கா. திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam)  அவர்களது முகநூல் பதிவு:

ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் நீட் நுழைவுத்தேர்வால் பாதிக்கப்பட்டிருப்பது தாழ்த்தப்பட்ட மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்வர்களும்

1. பிற்படுத்தப்பட்டோர் (BC) 30% 

இசுலாமியர்களுக்கான உள்ஒதுக்கீடு (BCM) 3.5%
(BC-26.5% + BCM-3.5%) = 30%

2. மிகவும் பிற்படுத்தப்போர் (MBC/DNC) – 20%

3.தாழ்த்தப்பட்டோர்+அருந்ததியர்(SC-15+ SCA-3)18%

4. பழங்குடியினர் 1% 

மொத்தம் = 69 %

தற்போது வெளியிட்டிருக்கும் பட்டியலில் பிரிவு வாரியாக (முதல் 3200 இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன)

BC = 56.09%, (1795 இடங்கள்)
BCM = 5%, (160 இடங்கள்)
MBC/DNC = 13.81%, (442 இடங்கள்)
SC = 5.25%, (168 இடங்கள்)
SCA = 0.22 %, (7 இடங்கள்)
ST = 0.03 % (1 இடம்)
OC = 19.59% (627 இடங்கள்)

முதலில் இட ஒதுக்கீட்டு வாரியாகப் பார்த்தோமானால் நீட் தேர்வால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்பது தெளிவாக புரிகிறது.

முக்கியமாக திறந்த பிரிவு என்பது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பொதுவான இடங்கள். ஆனால் 5% க்கும் கீழுள்ள உயர் வகுப்பினர் ஏறக்குறைய 20% இடங்களை நிரப்பியுள்ளனர். இது அப்பட்டமாக சமூக நீதிக்கு எதிரான சேர்க்கை என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக இந்தப் பட்டியலில் வராத மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 196 க்குமேல் கட் ஆப் எடுத்துள்ள நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகள், ஏழை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் அதிகப் பணம் செலுத்தி கோச்சிங் வகுப்புகள் செல்ல முடியாததே நீட் பட்டியலில் இடம்பிடிக்க முடியாததற்கு முக்கியக் காரணம்.

இவர்களின் கண்ணீருக்கு யார் பொறுப்பாவது?

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை மீறப்பட்டுள்ளதை நீதிமன்றங்கள் அனுமதிகின்றன்வா?

இதற்கு யார் பொறுப்பு?