சென்னை:

மிழகத்தின் அடுத்த டிஜிபிக்கு 3 பேர் போட்டியிடும் நிலையில், யுபிஎஸ்சி யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி யாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த (ஜூன்) மாதத்துடன் முடிவடைவதால் புதிய டிஜிபி தேர்வு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை டில்லியில்  கூட இருக்கும் யுபிஎஸ்சி (UPSC)  மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை தேர்வு செய்யும் என தெரிகிறது.

ஏற்கனவே டிஜிபி பணி வழங்குவதாக தொடர்பாக உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்திருந்தது. அதன்படி, மாநில அரசு சுயமாக டிஜிபி களை நிய மிக்க முடியாது. யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபி களை நியமிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், டிஜிபி தேர்வுக்கு  மூத்த ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை, மாநில அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை பரிசீலிக்கும் தேர்வாணையம், முதல் ஐந்து அதிகாரிகளில் மூவரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பும்.

அப்படி அனுப்பப்படும் மூவரின் பெயர்களில் இருந்து மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து டிஜிபியாக நியமிக்க வேண்டும்.

டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து டிஜிபியாக இருப்பார். அவரது பணி ஓய்வு இடையில் வந்தாலும் கூட, அவர் இரண்டாண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்ந்து இருப்பார் என்றும்,  டிஜிபி பதவிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது பணியாற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் சீனியாரிட்டி பட்டியல் யுபிஎஸ்சிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இதில் ஒருவரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்.

தமிழகத்தில் 14 டிஜிபிக்கள் உள்ளனர். சட்டம்- ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வுபெறுவதை யொட்டி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அடுத்தடிஜிபிக்கான 14 பேர் கொண்ட பேனலை மத்திய அரசு பணியாளர்தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

தற்போதைய  டிஜிபிக்களில் ஆஷிஸ் பங்க்ரா இந்த மாதமும், ஜாங்கிட் வரும் ஆகஸ்டிலும், காந்திராஜன் வரும் அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். திரிபாதி அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஓய்வு பெறுகிறார். 2020 மே மாதத்தில் லட்சுமி பிரசாத், டிசம்பரில் ஜாபர் சேட், 2021 ஜனவரியில் அசுதோஷ் சுக்லா, மே மாதத்தில் தமிழ்ச்செல்வன், ஜூலையில் மிதிலேஷ் குமார் ஜா ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.

உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்படி குறைந்த பட்சம் 6 மாதங்கள் பணிக்காலம் தேவையுள்ள நிலையில்,  ஜாங்கிட், ஆஷிஸ் பங்க்ரா, காந்திராஜன் தவிர மற்ற அனைவரும் டிஜிபி  பதவிக்கான தகுதி பட்டியலில் இடம் பிடிக்கின்றனர்.

இந்த நிலையில், , தமிழகத்தின் புதிய டிஜிபியாக திரிபாதி, ஜாபர்சேட், விஜய்குமார் ஆகியோரில் ஒருவர் நியமனம் செய் யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு  ஜாபர் சேட்டை தவிர மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி)  பரிந்துரைக்கும் நபரையே தமிழக அரசு ஏற்கும் என தெரிகிறது.

சீனியாரிட்டி அடிப்படையில் லாமல் வேறு நபரை நியமித்தால் பல்வேறு சர்ச்சைகள் உண்டாகும் என்பதால் மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைக்கும் நபரையே தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என தலைமை செலயக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.