சென்னை:
மிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் திருநாவுக்கரசர். Thirunavukkarasu சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இதுபற்றி அறிவிப்பார்கள்.  தலைவராக என்னையோ அல்லது வேறு யாரை  தலைவராக நியமித்தாலும் அவர்களுக்கு  முழு  ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செயல்படுவோம் என்றார்.
மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. என்னை பற்றி தரக்குறைவாக எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு மறுப்பு ஏதும் இளங்கோவன் தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை.  அவர் தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது அவரது செயல்பாடுகளால், அவரை  பலர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டபோதும் ,  நான்  அவருடன் இணைந்தே பணியாற்றினேன்  என்பது அவருக்குத் தெரியும்  என்றும் அவருடைய உணர்ச்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
நான் அதிமுகவில் இருந்து பாரதியஜனதாவுக்கு சென்று, கடைசியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் இது தெரியும். நான் எதையும் மறைக்கவில்லை. எந்த கட்சியில் இருந்தாலும் யாருக்கும் நான் துரோகம் செய்தது கிடையாது.
இவ்வாறு  பேட்டியின்போது அவர் கூறினார்.