சென்னை:
முல்லை பெரியாறு அணை முழுமையாகத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்தார்.
கடந்த 28-ம் தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தமிழக நீர்வளத்துறைப பொறியாளர்களால் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டது.
கேரளா அரசு அதிகாரிகள் தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்றது தவறான தகவல் என்றும் அவர் தெரிவித்தார்.