பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது பிரிஸ்பேன் டெஸ்ட். இதுவே, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாகும்.
இந்திய அணியில், பலர் காயம் காரணமாக விலகிய நிலையில், பல புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், விஹாரி, பும்ரா உள்ளிட்டோர் விலகிய நிலையில், வேறுபலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விபரம்:
ரோகித் ஷர்மா, ஷப்மன் கில், சத்தீஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே(கேப்டன்), மயங்க் அகர்வால், ரிஷப் பன்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், டி.நடராஜன்.
ஜடேஜாவுக்கு பதிலாக, ஆல்ரவுண்டராக சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார்.