சென்னை

ரும் சட்டப்பேரவை தொடரில் கொரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அரிக்கையை வெளியிடத்  தயாராக உள்ளதாக தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  தற்போது உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளித்து வருகிறது.    பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் தடுப்பூசிகள் விரயம் அதிக அளவில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  மீனம்பாக்கத்தில் ஒரு நிகழ்வில் பங்கு பெற்ற தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர்., “இதுவரை தமிழகத்துக்கு 1,80,72,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன    இந்த அரசு பதவி ஏற்ற பிறகு தினசரி சராசரியாக 1,61,397 பேர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.  கடந்த 70 நாட்களில் 1,12,90,000 பேருக்குத் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.

சென்ற அதிமுக ஆட்சியில் 4,34,838 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் வரும் சட்டப்பேரவை தொடரில் தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாராக உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.