பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

Must read

சென்னை:
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article