புதுச்சேரி:

காவிரி மேலாண்மை வாரியம் வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதி மன்றத்தில், புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காமல்,  ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு  உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மன்போக்கை கண்டித்து தமிழகத்தில் ஆளும் கட்சி உள்பட அனைத்து கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில், மத்திய அரசு நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர, மாநில கவர்னர் கிரண் பேடி அனுமதி அளிக்க மறுத்த நிலையில,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.   இதுமேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த வழக்கு,  தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து விசாரணை எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.