பொதுவாக ஒருசில பெண்கள் தூங்கும் போது உள்ளாடைகளை நீக்கி விட்டு தூங்குவார்கள் சிலர் அது அணிந்து கொண்டு தூங்குவார்கள் அது அவர்களது சொந்த விருப்பம்.

இரவு தூங்கு போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், தவறான சைஸ் பிராவை நீங்கள் அணிந்து கொண்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் பால் கொடுக்கும் பெண்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் பிராவை அணிய வேண்டும். தூங்கும் போது இறுக்கமான மற்றும் வசதியற்ற பிராவை போட்டுக் கொள்வதால் உடல் நலக்கேடுகள் ஏற்படும்.

மிக இறுக்கமான பிரா அணிபவர்களின் இரத்த ஓட்டம் தடைபடும்.

அடிப்பகுதி ஒயர் அல்லது எலாஸ்டிக் உள்ள இறுக்கமான பிராவை நீங்கள் போட்டுக் கொள்ளும் போது தோல் எரிச்சல், தூக்கமின்மை போன்ற நிலை உண்டாகும். ஆகவே, ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொள்லாம். இது உங்களுக்கு தொந்தரவை கொடுக்காது.

எலாஸ்டிக் இறுக்கமாக இருக்க கூடிய பிரா உடலில் படும் பகுதியில் நிறமிகள் ஏற்படுத்தும். உறங்கும்  போது பிராவை போட்டுக் கொள்வதால் இந்த நிறமிகள் அதிகமாகின்றன. எனவே, இது போன்ற பிரசனைகளைத் தவிர்க்க  மென்மையான, தளர்வான பிராவை உறங்கும் போது அணிந்து கொள்ளலாம்.

உங்கள் உடல் வாகுக்கு ஏற்ப மார்பகங்களுக்குத் தேவையான தாங்கும் சக்தியை அது தருவதுடன், சுகாதாரமாகவும் இருக்கின்றன.

கீழே ஒயர் உள்ள பிராக்களை நீங்கள் தொடர்ந்து அணிந்து கொள்ளும் போது அது  உங்கள் மார்பகத்திற்குள் ஆழமாக சென்று விடுவதால் நிணநீர் அடைப்பு (Lymphatic Blockage) உண்டாகும்.

இந்த பிரசனையின் தொடர்ச்சியாக வேறு பல அறிகுறிகளும் ஏற்படலாம். மார்பகங்களில் ஏற்படும் எடிமா அல்லது நீர் வீக்கம்(Oedema – எடிமா) ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்த கோடைகாலத்தில் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டு தூங்குவதால் நிறைய வியர்வையை வெளியேற்றும். ஃபேன்ஸி பிராக்கள் இந்த பிரசனையை அதிகரிக்கின்றன. நீர்கட்டிகள் மற்றும் தோல் கட்டிகள் நமது உடலில் எங்குவேண்டுமனாலும் உண்டாகலாம். இருப்பினும் இருக்கமான இடங்களில் இது உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே, பாலியஸ்டர் அல்லது சணல் போன்ற செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட  பிராவுக்கு பதில் காட்டன் பிராக்களை அணியுங்கள். ஆரோக்கியம் அவசியம்.

எஸ்.தமிழ் இனியா