சென்னை: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பேரவை கூடும்போது நேரலை ஒளிபரப்பு செய்ய உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்களைத் தொடரந்து, கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என திமுக கூறியதே, எப்போது ஒளிபரப்பு செய்யப்படும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் கலைவாணர் அரங்கில் நடைபெறுவதால நேரலை செய்ய முடியவில்லை. மீண்டும் சட்டபபேரவை நிகழ்ச்சிகள் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடைபெறும்போது, நிச்சயமாக நேரலை செய்யப்படும் என தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel