பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Must read

சென்னை: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்பட வில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
40 சதவீதம் கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

More articles

Latest article