சென்னை:
திமுக தேர்தல் அறிகையில் சொல்லியபடி பால் விலை 25 ரூபாய்க்கு எப்போது கிடைக்கும் என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
கருணாநிதி அறிக்கை:  அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை  என்றும்,  ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 48க்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
karunanithi
தனியார் நிறுவனங்களின் பால் விலை ஒரு லிட்டர் ரூ. 54க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க சட்டம் தேவை என்றும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர் சங்க கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்ய வேண்டும், உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரு லிட்டர் பாலை ரூ. 25க்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.