டில்லி:
.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று டில்லியில்  பத்திரிகையாளர்களை சந்தித்த  சசிகலா புஷ்பா “தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட வீட்டில்,  நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன். வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை.  என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை.
என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே  என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்” என்று  தெரிவித்தார்.
6
மேலும் அவர், “அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். எனக்காக காங்கிரஸ், திமுக, பாஜகவினர் குரல் கொடுத்தார்கள்.. அவர்களுக்கு நன்றி” என்று  சசிகலா புஷ்பா கூறினார்.
“ஜெயலலிதா உங்களை அடித்தாரா?”  என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு,   சசிகலா புஷ்பா எந்த பதிலும் தரவில்லை.   வேறு யாராவது அடித்தார்களா என்ற கேள்விக்கும் சசிகலா புஷ்பா பதில் தரவில்லை.
ஒரு ராஜ்யசபா எம்.பியை முதல்வர் பொறுப்பில் இருப்பவர், அடைத்துவைத்தார், சித்திரவைத செய்தார் என்று புகார் எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி  விசாரணை நடத்த வேண்டும் என்ற  என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.