மதுரை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று தமிழக அரசு பதில் தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவில், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் குறித்து திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என   சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்,  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 2018 பிப். வரை நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு  தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கே.கே.ரமேஷ் என்பவர், தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாளில் வெளியிட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது தமிழக அரசு எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்பது குறித்து,  மார்ச் 23க்குள் மாநில தேர்தல் ஆணையர், தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.