சென்னை:

ள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோரியிருந்த நிலையில்,  வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை வந்தடைந்தன. ஆனால், உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதுதான் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

உச்சநீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழகஅரசு உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்த, வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, நகர்புறங்களில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் சென்னைக்கு தேவையான 43 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பீகார் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தற்போது வந்தடைந்துள்ளன. அவை அனைத்தும் மணலி மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முதற்கட்ட பரிசோதனை செய்யும் பணியில் தற்போது பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வரும் 4ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.