கடவுளால் முடியாதவைகளை செய்ய எம் பி யால் எப்படி முடியும்? : பாஜக அமைச்சர் கேள்வி

புலந்த்சகர், உத்திரப் பிரதேசம்

டவுளாலேயே அனைத்து மனிதர்களின் தேவைகளையும் அளிக்க முடியாத போது மக்களவை உறுப்பினரால் எப்படி முடியும் என மத்திய பாஜக இணை அமைச்சர் மகேஷ் சர்மா கேட்டுள்ளார்.

மகேஷ் சர்மா உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான கவுதம் புத்த நகர் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.   இவர் மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். நேற்று முன் தினம் இவர் புலந்த்சகர் நகரில் உள்ள பஜன்லால் கோவிலில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

மகேஷ் சர்மா தனது உரையில், “உலகிலேயே பெரிய முட்டாள் கடவுள். கடவுள் நம்மை படைத்து உலகுக்கு அனுப்பி உள்ளார். அவ்வாறு இருக்க அனைவருக்கு, உணவு, உடை, வீடு, வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவைகளை அளிக்க வேண்டியது அவருடைய பொறுப்பாகும்.

இன்னும் நமது மாவட்டங்களில் குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் உள்ள பால்லியாவில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்று மதிய உணவை உண்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். தம்மால் உருவாக்கப்பட்டவர்களின் தேவையை கடவுளாலேயே அளிக்க முடியாத நிலையில் ஒரு மக்களவை உறுப்பினரால் எப்படி முடியும்?” என பேசி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP Minister mahesh sharma, Criticising god
-=-