வாட்ஸப்பில் அனுப்பிய தகவலை திருத்தம் செய்ய உதவும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது :

வாட்ஸப்பில் புதிதாக எடிட் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் அனுப்பிய தகவலை நீண்டநேரம் அழுத்திப்பிடிப்பதன் மூலம் எடிட் மெனு தோன்றும் அதன் பின் அந்த தகவலில் தேவையான பகுதியை திருத்தம் செய்துகொள்ளலாம்.

ஆனால் தகவல் அனுப்பிய 15 நிமிடத்திற்குள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய அம்சம் பலகட்ட சோதனைக்குப் பிறகு தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த புதிய அம்சம் அனைத்துப் பயனர்களின் வாட்ஸப்பிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.