2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள்  வெளியிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள  வாட்ஸ்அப் செயலியில், அவ்வப்போது புதுப்புது வகையான அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், ஃபேஸ் புக்கை போல வாட்ஸ்அப்பிலும் விளம்பரங்கள் வெளியிடவும் அதை நிர்வகிக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே அதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஃபேஸ்புக் நிறுவனம்,  வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிளை முன்னெடுத்து வந்தது.

ஏற்கனவே ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலில்  ஸ்டோரீஸ் அம்சத்தில் விளம்பரங்கள் தோன்றுகின்றன. இந்த நிலையில்,  குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப்பிலும் விளம்பரங்கள் வெளியிட்டு வருமானத்தை பெருக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரும் 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வர்த்தக மாநாட்டில்  தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரி களுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.