மெல்போர்ன்:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரன் பிஞ்ச், இங்கிலாந்து அணி கேப்டன் இயோயின் மோர்கன் ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.


உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டி மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இயோயின் மோர்கான் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான ஆலன் பார்டர் கூறும்போது, விராட் கோலியின் தோற்றம் இங்கிலாந்து கேப்டன் மோர்கான் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் ஆகியோரை விட சிறந்த கேப்டனாக பிரதிபலிக்கிறது.

விராட் கோலி வித்தியாசமான கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன்.  மூர்க்கத்தனமாக விளையாடக் கூடியவர்.

இந்த 3 கேப்டன்களையும் என்னால் வரிசைப்படுத்த முடியாது. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தலைமையிலான அணி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளதை மறுப்பதற்கில்லை.

இக்கட்டான சூழலில் ஆடுவதில் இங்கிலாந்து கேப்டன் பிஞ்ச் வல்லவர்.

இவர்கள் மூவருக்கும் அவர்களுக்கான பொறுப்பு தெரியும். பொதுவாக மூன்று பேரும் உலகக் கோப்பை போட்டியில் ஜொலிப்பார்கள் என்றார்.