புதுடெல்லி:

விமானப் படை கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது, அவரது மனைவியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.


பாகிஸ்தானுக்குள் நுழைந்து பால்கோட்டில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பின்னர், பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்த போது, இந்திய விமானப்படையினர் அதனை முறியடித்தனர்.

அப்போது, பாகிஸ்தான் விமானப்படையினர் சுட்டதில், விமானப்படை கமாண்டர் அபிநந்தன் விமானம் கீழே விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டார்.

அப்போது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தொலைபேசியில் இந்தியாவில் உள்ள மனைவி தன்வி மார்வாவிடம் பேசுமாறு அபிநந்தனை கேட்டுக் கொண்டனர். ஏதேனும் தகவல் கிடைக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.

தொலைபேசி அழைப்பு சவுதி அரேபியாவிலிருந்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியா எண் வழியே பேசுகின்றனர் என்பதை அறிந்து கொண்டார்.

என்ன செய்கிறீர்கள் என மனைவி கேட்க, டீ குடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அபிநந்தன்.
டீ எப்படி இருக்கிறது என்று மனைவி கேட்டார். அருமையாக இருக்கிறது என்று அபிநந்தன் பதில் அளித்தார். நான் போடும் டீயை விடவா நன்றாக இருக்கிறது என்று திருப்பிக் கேட்ட , சிரித்துக் கொண்டே அபிநந்தன் ஆம் என்றார்.

வரும்போது அந்த டீ எப்படி போடுவது என்ற ரெசிபியை வாங்கி வாருங்கள் என்றார்.

குழந்தைகள் கேட்டால் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்வது என மனைவி கேட்டார். அப்பா ஜெயிலில் இருக்கிறேன் என்று சொல் என அபிநந்தன் பதில் அளித்தார்.

இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை கேட்டு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏமாந்துபோனது தான் மிச்சம்.