
கட்சி ரீதியாக துணைப்பொதுச்செயலாளர் அறிவிக்கும் உத்தரவுகள் எதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி, அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தவிர, துணைப்பொதுச்செயலாலராக பொறுப்பு வகிக்க தினகரனுக்கு கட்சி விதியின்படி இயலாது என்றும் தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தினகரன், திருவண்ணாமலை மூக்குப்பொடி சாமியாரிடம் நேற்று ஆசி பெற்றுவிட்டு தற்போது தஞ்சை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தஞ்சையில் தனது நெருங்கிய உறவினர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தினகரன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]