மதுரை:  தற்போது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் திமுக அரசு, கடந்த  காலத்தில் நடத்திய  உலக முதலீட்டாளர் மாநாட்டின் கிடைத்தது என்ன? என்பத குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனை. ஏற்கனவே நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? என தமிழக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற  மதசார்பின்மை மாநாடில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தற்போது சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விமர்சித்தார்.

சென்டினயில்  நடக்கும் உலக மூதலீட்டாளர் மாநாட்டில் 3000 பேர் கலந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்கள். 3,000 பேர் தமிழகம் வந்து தொழில் செய்ய போகிறார்களா? என கேள்வி எழுப்பியதுடன், ஏற்கனவே ஒரு உலக முதலீட்டாளர் மாநாடை நடத்தி புரிதல் ஒப்பந்தம் போட்டீர்களே,   அதில் எத்தனை ஆயிரம் கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்று உங்களால் வெள்ளை அறிக்கை விட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர்,  மக்களை ஏமாற்றுவது திமுகவினருக்கு  கை வந்த கலை என்றவர்,  திமுக ஒரு பச்சோந்தி.. திமுகவிற்கு வேண்டியது ஒரு அதிகாரம் தான். கருணாநிதி ஆட்சி செய்து வந்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இப்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்.. மக்களை பற்றி கவலையே கிடையாது. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டு போனால் அவர்களுக்கு என்ன கவலை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் அனைவரும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு அரசாங்கம் சிறப்பாக இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். இன்றைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறால்.. அடிக்கும் கொள்ளையால் இன்றைக்கு தமிழ்நாடு சீரழிந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்கிறார்.. பொருளாதார நிபுணர் சொல்கிறார்.. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருப்பதாக சொல்கிறார்.

அப்படியென்றால் 2 ஆண்டு ஆட்சி காலத்திலே ரூ.30,000 கோடி கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனையாக மக்கள் பார்க்கின்றார்கள். இந்த பணத்தை எல்லாம் சிறுபாண்மை மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருந்தால் இவர்கள் உங்களை மனதார பாராட்டியிருப்பார்கள். இத்தனை பணத்தையும் கொள்ளையடித்து என்ன செய்ய போறாங்க என்று தெரியவில்லை. கொள்ளை அடிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்ட கட்சி திமுக. மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள்.

இவ்வாறு பேசினார்.