சென்னை: எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர் முதல்வர் ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி  தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி (நாளை) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக 27 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.

இந்த நிலையில், ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!

5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்;

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.

எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்!

ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]