சென்னை :

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து உயர்தர சிகிச்சைக்காக  சென்னையின் சங்கர நேத்ராலயா உள்ளிட்ட சிறப்பு மருத்துவமனைகளை நாடி வந்தவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களும், போக்குவரத்து முடங்கியுள்ளதால்  மருத்துவமனைகளுக்கு வரும் ஆட்கள் வரமுடியாமல் குறைந்து வருகிறது என்பது தான் நிதர்சனம்.

டையாலிசிஸ், ரேடியேஷன், கீமோதெரபிபேஸ் மேக்கர் கருவி பொருத்தியவர்கள், தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு  ஏற்படும் அன்றாட உடல் உபாதைகள்பிரசவம் உள்ளிட்ட அவசர மருத்துவ சேவைகளுக்காக மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளுக்கு போக்குவரத்து காரணங்களால் தடை ஏற்பட்டுள்ளது

பெங்களூரு மற்றும் ஆந்திராவின் முக்கிய இடங்களில் உள்ள பிற நோயாளிகள் கால் டாக்ஸி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கபட்டுள்ளனர். இதற்கென பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கால் டாக்சிகள் நோயாளிகளை வீட்டிலிருந்து அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை முடிந்து அவர்கள் வீட்டிலேயே திருமப கொண்டு சென்று விடுவதற்கான டூ அண்டு ப்ரோ (To & Fro) சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் என்ற  நிறுவனம் இலவச கார் சேவையை துவங்கி இருக்கிறது 9500067082 என்ற எண்ணிற்கு 2 மணி நேரம்  முன்னதாக  அழைத்து முன்பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் செல்ல வேண்டிய சேவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

அரசு ஆம்புலன்ஸ் சேவை 108 மற்றும் 102 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டாலும் இதுபோல் அழைத்து செல்கிறார்கள்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு வழி பயணமாக வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை மட்டுமே செய்வதால், திரும்பி செல்வதற்கு வழியின்றி பலர் பரிதவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக 108 சேவையை தொடர்பு கொண்டு கேட்ட போது, வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு மட்டுமே இந்த சேவை என்று தெரிவித்தனர். மேலும், 102 சேவையை தொடர்புகொள்ள பல முறை முயன்றும் முடியவில்லை.

இதர மருத்துவ சேவைகளுக்கு செல்ல நினைப்போர் தகுந்த போக்குவரத்து இல்லாத காரணத்தால் செய்வதறியாது தவித்துவரும் வேலையில்வாட்ஸாப்பில் வடை சுடும் குரூப்புகளோ நோயாளியின் வலியறியாமல்,பார்த்தீர்களா கொரோனா வைரஸ் வந்த பிறகு மற்ற நோயெல்லாம்  காணாமல் போய் மருத்துவமனையில் கூட்டம் குறைந்து விட்டதுஎன்று எழுதிவருகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு சுமார் ஐந்தரை லட்சம்  அதாவது நாளொன்றுக்கு 1300 க்கும் மேற்பட்டோர் பல்வேறு காரணங்களுக்காக இறக்கின்றனர், இதில் மேற்கூறிய தீவிர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளும் அடக்கம்.

இந்த நிலையில் இதுபோன்ற தீவிர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளை, போக்குவரத்து இல்லாமல் வீட்டிலேயே முடக்கி இந்த நிரந்தர நோயாளிகளின் இறப்பு விகிதத்தை மேலும் கூட்டாமல், இவர்களை அவரவருக்கு உண்டான மருத்துவ தேவைகளை பெறஅண்டை மாநிலங்களில் உள்ளது போல் போக்குவரத்து ஏற்பாடுகளை இவர்களுக்கு அரசு செய்து தர வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளுக்கு பெயர்போன இடம் சென்னை என்று இதற்கு முன் மார்தட்டி எழுதிவந்த பத்திரிக்கைகள் எல்லாம்,  கொரோனா வைரஸ் காரணமாக பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்கி வரும் அரசுக்கு, இது தொடர்பான உண்மை நிலையை  உணர்த்தி, தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை முறையாக பெற்று தருவார்களா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் இதர நோயாளிகள்.