நெட்டிசன்:
 நியாண்டர்செல்வன் ( Neander Selvan) அவர்களின் முகநூல் பதிவு:
டிரம்ப்பை எதிர்த்து மைக்கேல் மூர் எனப்படும் இடதுசாரி ஹாலிவுட் டாமுகெண்டரி தயாரிப்பாளர் மைக்கேல் மூர் “டிரம்ப்லேண்ட்” எனப்படும் டாக்குமெண்டரியை எடுத்தார். அதில் “டிரம்ப் ஏன் ஜெயிப்பார்?” என அவர் பேசியது டிரம்ப்பை தாக்கும் நோக்கில் அமைந்தாலும், அது கடைசியில் புகழ்மாலையாக அமைந்துவிட்டது. டிரம்ப் ஏன் வென்றார் என்பதையும் அது விளக்குகிறது. அதன் சுருக்கம் பின்வருமாறு..அதன் விடியோவையும் காண தவறவேண்டாம்
“அமெரிக்க கார் உற்பத்தியின் தலைமையகமான டெட்ராயிட் நகர எகனாமிக் க்ளப்புக்கு வந்த டிரம்ப் அங்கே போர்டு கம்பனி நிர்வாகிகளை பார்த்து “மெக்சிகோவுக்கு உங்கள் தொழிர்சாலைகளை கொண்டுபோனால் அவற்றுக்கு 35% வரி விதிப்பேன்” என எச்சரித்தார். இது பார்க்க மிக அற்புதமான காட்சியாக இருந்தது. ரிபப்ளிக்கன், டெமக்ராட் என எந்த அரசியல்வாதியும் இக்கம்பனி முதலாளிகளை நோக்கி அப்படி நேருக்கு நேர் சொல்ல துணிந்ததில்லை.
டிரம்ப்பின் இந்த வார்த்தைகள் மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்ஸின் மக்களின் காதில் தேனாக பாய்ந்தது. அவருக்கு வாக்களிப்பதன் மூலம் தம்மை மறந்துவிட்ட அரசியல் அமைப்பு, அதிகாரபீடம் , ஊடகங்கள், படித்த மேட்டுகுடி வர்க்கம் ஆகியவற்றுக்கு மக்கள் ஒரு மிகப்பெரும் செய்தியை சொன்னார்கள்.
இத்தனை நாட்களாக மறக்கட்டு, மிதிக்கபட்டு, ஒடுக்கபட்ட மக்களின் வலியை அவர் மட்டுமே உனர்ந்தார். இவர்கள் முன்பு நல்ல பொருலாதார நிலையுடன் நல்ல வேலைகளில் இருந்தவர்கள். டிரம்ப்பை அவர்கள் ஒரு வெடிகுண்டாக கருதினார்கள். தம் வாழ்க்கையை தம்மிடம் இருந்து பறித்த அழுகி நாறும் அரசியல் அமைப்பு மேல் அவர்கள் வீசி எறிந்த பெட்ரோல் குண்டு தான் டிரம்ப்.
தம்மை மறந்த அரசியல்வாதிகள், மேட்டுகுடி வர்க்கம், பத்திரிக்கைகள் ஆகியோர் டிரம்ப்பை எள்ளிநகையாடுவதை கண்டார்கள். அவற்றுக்கு அவர்கள் அளித்த மிகப்பெரும் Giant F*** you தான் டோனல்ட் டிரம்ப். அரசியல்வாதிகளுக்கு மனித இனவரலாற்றில் மக்கள் அளித்த மிகப்பெரும் F*** you என்பது டிரம்ப்புக்கு அவர்கள் ஓட்டுபோட்டதுதான்” என்றார் மைக்கேல் மூர்.
இது டிரம்புக்கு எதிராக அவர் பேசியது. ஆனால் பாராட்டுவது போல அமைந்துய்விட்டது. உண்மையாகவும் ஆனது”
ஜான் நாட்டன் வரைந்த இந்த புகழ்பெற்ற படம் “ஒபாமாவுக்கு முந்தைய 43 ஜனாதிபதிகளும் சேர்ந்து அவரால் மறக்கபட்ட மிட்வெஸ்ட் பகுதி உழைக்கும் மக்களை அவரை கவனிக்க சொல்லி கெஞ்சுவதாகவும், அவர் அதை கேட்காமல் அமைதியாக இருப்பதாகவும்” காட்டுகிறது
அந்த மறக்கப்ட்ட மனிதர்கள் தம்மை மறந்த அரசியல் அமைப்பின் மேல் வீசி எறிந்த வெடிகுண்டு தான் டிரம்ப்.
மைக்கேல் மூரின் உரையை காண்க