தாய்லாந்து,
மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி இடையில் தாய்லாந்து சென்றார்.
ஜப்பான் செல்லும் வழியில் தாய்லாந்துக்கு சென்று மறைந்த மன்னர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.  ஜப்பான் செல்லும் வழியில் தனது பயணத்திட்டத்தில் திடீரென மாற்றம் செய்த மோடி, தாய்லாந்தில் இறங்கினார். அவரை தாய்லாந்து போக்குவரத்து துறை மந்திரி பாங்காக் விமான நிலையத்தில் வரவேற்றார்.
2tailand-king
இதைத்தொடர்ந்து தாய்லாந்து மன்னரின்  கிராண்ட் அரண்மனைக்குச் சென்ற மோடி, அங்கு சமீபத்தில் மறைந்த மன்னர் பூமிபால் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
 
தாய்லாந்து மன்னர் பூமிபால், தனது 88 வயதில், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு அரண்மனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவரது உடலை பார்த்து அஞ்சலி செலுத்தி சென்ற வண்ணம் உள்ளனர்.

தாய்லாந்து மன்னர் பூமிபால்
தாய்லாந்து மன்னர் பூமிபால்

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 13ந்தேதி  இறந்தார். இவர் கடந்த 1946ம் ஆண்டு மன்னராக ஆட்சிப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
மன்னரின் மறைவையொட்டி ஓராண்டுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.