தூத்துக்குடி:
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி வந்த திருமாவளவன், செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர், “ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்கள் முன்னின்று போராட்டம் நடத்தியதால் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்த்துள்ளன.
ஆறு நாட்கள் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை 7வது நாள் மிகக் குறைந்த அவகாசம் மட்டும் அளித்து, போராட்டத்தை கைவிட சொல்லி தடியடி நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடியையும் பன்னீரையும் விமர்சனம் செய்ததால் வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டதா… காவல்துறையே வன்முறையை ஏற்படுத்தியதா?
தேசிய கொடியை அவமதித்ததால் போராட்டத்தை காவல்துறையினர் நிறுத்தினார்கள் என்றால் பிரதமர் தேசிய கொடியால் முகம் துடைத்தார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?
ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ, கிராபிக்ஸ் செய்யப்பட்டது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.