ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

பொதுவாக பலர் தட்சிணாமூர்த்தி, குருபகவானும் ஒன்று என்றே நம்பி வருகிறார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு நடத்தும்போது குரு பகவானுக்கு உரிய ஸ்தோஸ்திரங்க்ளும் சொல்லப்படுவது உண்டு.

ஆனால் உண்மையில் தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. இருவருக்கும் இடையே   நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், அதுபோல தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, என்றும் சிவகுரு என்றும் அன்றும் கூறப்படுகிறது.‘

64 சிவவடிவங்களில் ஒருவராக தட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஞானத்தின் வடிவாக இருக்கும் அவரை வழிபட்டால் அறிவும், தெளிவும், ஞானமும் பிறக்கும் என்பது நம்பிக்கை. இவர் தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.

அதே நேரத்தில் குருபகவான்என்பது ஒன்பது கிரங்களில் ஒன்றான கிரக வடிவம் என்றும், அவர் ஒரு பிரகஸ்பதி, அதிகாரி என்றும், தேவகுருவாகவும் பாவிக்கப்படுகிறார்.

தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

ஸ்ரீ குருபகவான்

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்.

குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்.

குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

ஆகவே,  தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக மட்டுமே (சிவகுருவாக) வழிபடுங்கள்.

சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கொண்டை கடலை மாலை,  சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு.  ஆனால் ஒருசிலர் அதில் தவறு இல்லை என்றும், தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குரு என்று சொல்கிறார்கள்.

ஆன்மிகப்படி அது தவறு என்றே கூறப்படுகிறது. . குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

ஆகவே தட்சிணாமூர்த்தியை அவரது சன்னதியிலும், குருபவானை அவர் அமர்ந்துள்ள நவக்கிரக சன்னதியிலும் வழிபட்டு வாழ்வை மெருகேற்றுங்கள்…

சிவ குருவான தட்சிணாமூர்த்தியை  ஒருவர் வழிபடுவதன் மூலம் ஏராளாமான பலங்களையும் புண்ணியங்களையும் பெற்று வாழ்வில் சிறக்க முடியும்

இன்று வியாழக்கிழமை  நாள் தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் தரிசித்து அவர்களின் அருளாசி பெறுங்கள்….