தியானம்:  இது அரசியல் கட்டுரை அல்ல.. அனைவரும் படிக்கலாம்!

ரவுண்ட்ஸ்பாய்:

ப்போ  அரசியலில் தியானம் இருப்பது ட்ரண்ட் ஆயிருக்கு. ஓ.பி.எஸ்ஸுக்குப் பிறகு நேற்று தீபாவும் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்திருக்காரு.

இந்த அரசியல் தியானங்கள்ளாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  உண்மையில் தியானம் அப்படின்னா என்ன…  அதன் பலன்கள் என்னன்னு வாசகர்களுக்கு சொன்னா என்னன்னு தோணுச்சு.

நமக்கு தெரிஞ்ச தியானக்காரரு கிட்ட (இவரு உண்மையிலேயே தியானம் பண்றவரு. எக்ஸ்பெசலி.. அரசியல்வாதி இல்லை..) கேட்டேன்.

அவரு சொன்னது இதுதான். படிச்சு பயன் பெறுங்க..

அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம் என்பதாம். இதை சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என்று எந்தவித வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானத்தின் பலன்கள் என்ன?

மனதில் அமைதி நிலவும்.

மன படபடப்பு குறையும்
நினைவாற்றல் கூடும்

ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.

வேலை செய்யும் ஆற்றல் பெருகும்

ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா உட்பட நோய்கள் நீங்கும்.
ஆயுள் அதிகரிக்கும்.

தியானம்  செய்வது எப்படி?

தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.

தியானத்தில்  இரண்டு நிலைகள் உள்ளன.

1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை நினைத்தோ, அல்லது ஒரு கருத்தில் மனைதை ஒன்ற்ச் செய்து தொடர்ந்து அதே சிந்தனையில் இருப்பது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுவது.

முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.  அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவத்தைத் தரும்.

இதுவரை நம் மனதில் புதைந்து கிடந்த பல நூறு  நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது  சற்று சிரமமாக்ககூட  கூட இருக்கும். இதைப் போக்கவும்  வழி உண்டு. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.

இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும்.  கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருப்பதால்  வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித ஒலியும் நம் மனதுள் போகாது.

தியானம் பற்றிய  ஆரம்பகட்ட அறிமுகம்தான் இது.  உண்மையில் தியானம் இருக்கும்போது, கிடைக்கும் பேரனுபவத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது. தியானம் செய்து உணரவே முடியும்!”

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: What is Meditation, தியானம்:  இது அரசியல் கட்டுரை அல்ல.. அனைவரும் படிக்கலாம்!
-=-