சென்னை:

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்களில் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் மேற்கொண்டு தேமுதிகவுடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இதன் காரணமாக தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 4 வேட்பாளர்களும் செய்வதறியாது திகைத்துப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக ஆரம்பத்தில் பாமக போலவே 7+1 தொகுதி கள் வேண்டும் என்றும், அத்துடன் தேர்தல் செலவுக்கு பணமும் தேவை என்று நெருக்கடி கொடுத்தது.

விஜயகாந்த் செயல்பட முடியாத நிலையில், அவரது மனைவிதான் அரசியல் விவகாரகங்களை கவனித்து வருக்றார். பணப் பேராவை கொண்டவர் என்று பிரேமலதா என்ற அவரது கட்சி நிர்வாகி களே குற்றம் சாட்டும் நிலையில், ஒரேநேரத்தில், அதிமுக, திமுக இரு அணியிலும் கூட்டணி பேரம் பேச, அதை திமுக அம்பலப்படுத்த வேறு வழியின்றி அதிமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேமுதிக ஐக்கியமானது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவித்தாச்சு… ஆனால் தேர்தல் பணிகள் தொடங்கவில்லை… இதன் காரணமாக வேட்பாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் மட்டும்  விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து எடப்பாடியும் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், மற்ற வேட்பாளர்களான  விருதுநகரில், அழகர் சாமி, வட சென்னை , மோகன்ராஜ்; திருச்சியில், டாக்டர் இளங்கோவன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வசதியின்றி தவிப்போடும், திகைப்போடும்  காத்திருக்கின்றனர்.

தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமை நிதி உதவி வழங்கும் என உறுதி அளித்த நிலையில், இதுவரை தலைமையிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,  அறிவிக்கப்பட்டுள்ள  வேட்பாளர்கள் ஏண்டா போட்டியிட ஒப்புக்கொண்டோம் என்று புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

வட சென்னை வேட்பாளர் மோகன்ராஜ் கடனில் சிக்கி தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேமுதிகவை சேர்ந்த பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்ட நிலையில், தற்போது களத்தில் உள்ள வேட்பாளர்கள்,  மற்ற கட்சிகளை போல செலவு செய்து விளம்பரப்படுத்த முடியாமல் முடங்கி உள்ளனர்.

தேமுதிக தலைமை கருணை காட்டும் என்று எதிர் பார்ப்போடு காத்திருக்கின்றனர். தலைமை நிதி வழங்கினால்தான், தேர்தல் பிரசாரம், வாக்குச்சாவடி பூத் செலவு, தேர்தல் பணிமனை செலவு, பிரசார செலவு என அனைத்துக்கும் பணம் தேவைப்படுவதால், பிரேமலதாவின் கருணை பார்வை தங்கள் மீது எப்போது விழும் என , கா……………த்திருக்கின்றனர்