மும்பை: இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் நாடுகளில், எளிதில் வியர்க்காத நிலையில், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வர்? அவர்களுக்கான மாற்று என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்குவதற்கு எச்சில் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது அந்தப் பரிந்துரை ஐசிசி அமைப்பால் ஏற்கப்பட்ட நிலையில், அதுகுறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற குளிர் நாடுகளில் எளிதில் வியர்க்காது. அந்த சூழலில் பந்துவீச்சாளர்களின் நிலை? நாம் எந்த காலக்கட்டமாக இருந்தாலும் எச்சிலைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், வியர்வையைப் பயன்படுத்துகையில் பந்தின் எடை கூடிவிடும். இதனால், பந்துவீச்சாளர்களுக்குத்தான் சிரமம். எச்சில் சுகாதாரமற்றது என்கின்றனர்? ஆனால், வியர்வை மட்டும் நல்லதா?

வியர்வையால் பந்து சுத்தமாகுமே தவிர, பளபளப்பாகாது. ஆதனால் எச்சில்தான் சரியான தேர்வு. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, எச்சிலுக்கு தடைவிதிக்கையில், 50 ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தை பயன்படுத்தலாம். மேலும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறிப்பிட்ட அளவு மெழுகை உபயோகிக்க அனுமதிக்க வ‍ேண்டும்” என்றுள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர்.