சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
* தமிழ்நாட்டின் பிரதான மற்றும் முக்கிய கோயில்களில் மார்ச் 31வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* ஐடி பூங்காக்கள், சிறு-குறு-பெரிய தொழிற்சாலைகள் முடிந்தளவிற்கு தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிசெய்ய வழிவகுத்து, அலுவலகங்களுக்கு நேரடியாக வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
* பெரிய ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஹைபர் மார்ககெட்டுகள் ஆகியவை 20ம் தேதி முதல் மூடப்படும்.
* மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், பழம் & காய்கறிக் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவை திறந்திருக்கும்.
* மார்ச் 31ம் தேதி வரை பெரிய கோயில்களில் தரிசனங்கள் ரத்துசெய்யப்படுகின்றன. அதேசமயம், பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
* சர்ச்சுகள் மற்றும் மசூதிகளில் மக்கள் கூடுகைகள் தடைசெய்யப்படுகின்றன.
* மாநிலங்களுக்கு இடையே செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்றவை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் மற்றும் விமான நிலையங்களில் பயணிகளும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவர்.
என்பன போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை அறிவித்துள்ளது தமிழக அரசு.