மேற்கிந்தியத் தீவுகள்

முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இதில்  முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.  வரும் 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது/

இத்தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் அணி ரோகித் சர்மா தலைமையிலும், டி 20 அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும் விளையாடுகின்றன.   தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ள மேற்கிந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அணிக்கு கிரேய்க் பிராத்வெய்ட் தலைமை தாங்குகிறார்.

அணியி ல் உள்ளவர்கள் ,

கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்

ஆவார்கள்.