ல்பாய்குரி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் கைதான 30 பாஜகவினருக்கு மாமிச விருந்து அளித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தேபேந்திர் நாத் ராய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அரசுக்கு எதிராக பாஜகவினர் 12 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்தனர்.  இதையொட்டி மாநிலமெங்கும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.  அவ்வகையில் ஜல்பாய்குரி பகுதியில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை அருகில் உள்ள கொத்வாலி காவல்நிலையத்துக்கு சுமார் 12.30 மணிக்குக் கொண்டு வரப்பட்டனர் அவர்களிடம் காவல்நிலைய அதிகாரி மதிய உணவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டுள்ளார்.  அவர்களில் சிலர் மாமிசம் மற்றும் சாப்பாடு கேட்டுள்ளனர்.  அவர்களுக்கு மதியம் 2.30 மணிக்கு காவல்துறையினர் மாமிசம் மற்றும் சாதம் பொட்டலங்களில் அளிக்கப்பட்டுள்ளன.

இது கைதானவர்களுக்கே வியப்பை அளித்துள்ளது.   வழக்கமாக காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது அருகில் உள்ள சிறியு உணவு விடுதிகளில் இருந்து சாதாரண உணவு மட்டுமே அளிப்பது வழக்கமாகும்.   ஆகவே கைது செய்யப்பட்ட பாஜகவினர் மகிழ்வுடன் இந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுள்ளனர்.

அடுத்த நாள் அந்த காவல் நிலைய ஆய்வாளர் வேறு இடத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஜல்பாய்குரி காவல்துறை அதிகாரி அபிஷேக் மோடி இது துறை சம்பந்தப்பட்ட இடமாற்றம் எனக்கூறி உள்ளார்.  ஆனால் இதற்கு முக்கிய காரணம் பாஜகவினருக்கு அளிக்கப்பட்ட மாமிச விருந்து என காவல்துறை வட்டாரங்களில் அதிகாரபூர்வமற்ற செய்திகள் உலவுகின்றன

அதே வேளையில் பாஜக தலைமை அலுவலகத்தில் மாமிசம் அளிக்குமாறு கேட்ட பாஜக தொண்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது