pregnancy, business, work and technology concept – pregnant businesswoman with computer sitting at office table

கொல்கத்தா

மேற்கு வங்க அரசில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் உட்பட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் பேறு கால விடுமுறை தரப்படும் என மம்தா பேனர்ஜி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்க அரசின் நிதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அரசில் பணிபுரியும் அனைத்து துறையில் உள்ள பெண் ஊழியர்களுக்கும்,  மென்பொருள் துறை உட்பட, மொத்தம் 180 நாட்கள் பேறு கால விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது தவிர கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவுக்கு 42 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது அரசில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அந்த விடுமுறை நாட்களில் அவர்களுக்கு அவர்களின் ஒப்பந்தத்தின் படி கூறப்பட்டுள்ள முழு ஊதியமும் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.