அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவ உள்ளார்.

இதற்காக 11 நாள் விரதத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ள நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது என்பது துறவிகள் மற்றும் ஞானிகளின் வேலை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ராமர் கோயில் அறக்கட்டளை மேற்கொள்ள இருக்கும் இந்த கும்பாபிஷேக விழா அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஜனவரி 22ம் தேதி மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மதநல்லிணக்க பேரணி நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற உள்ள மாபெரும் பேரணியில் கலந்து கொண்டு தலைமை தாங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்கள் வழியாக செல்ல உள்ள இந்த பேரணியில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சிசேரியன் முதல் ப்ளூ சட்டை மாணவர்கள் வரை ஜன. 22ஐ கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மக்கள்